திருநெல்வேலி -ஜீலை -31,2024
Newz -webteam
பாளையங்கோட்டையில் நடைபெற்ற தீபக்ராஜா கொலையில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்த செயல்களில் ஈடுபட்ட ஆறு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்த (1) கண்ணன் மகன் நவீன் வயது 22 என்பவர் (3 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் உட்பட) 14 வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபராவார். (2) பெருமாள் மகன் முருகன் என்ற லெப்ட் முருகன் வயது 25 என்பவர் (2 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள் உட்பட) 23 வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபராவார். (3) இசக்கிபாண்டி மகன் பவித்ரன்; வயது 22 என்பவர்
(1கொலை வழக்கு, 1 கொலை முயற்சி வழக்கு உட்பட) 8 வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபராவார். (4) முத்துபாண்டி மகன் காசிராமன் வயது 24 என்பவர் (ஒரு கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட) 5 வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபராவார். (5) வேல்முருகன் மகன் முத்து இசக்கி வயது 23 என்பவர் (ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட) 4 வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபராவார். மற்றும் (6) தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ஐயப்பன் வயது 23 என்பவர் (ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட) 2 வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபராவார்.
மேற்கண்ட ஆறு நபர்கள் சேர்ந்து 20.05.2024-ஆம் தேதி 13:30 மணியளவில் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி, பூலம், வாகைக்குளத்தைச் சேர்ந்த சிவகுரு மகன் தீபக்ராஜா என்பவரை பாளையங்கோட்டை – திருச்செந்தூர் ரோடு நான்கு வழிச்சாலை அருகில் உள்ள வைரமாளிகை ஹோட்டல் அருகே வெட்டி கொலை செய்தனர்.
மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்த செயல்களில் ஈடுபட்ட நவீன், முருகன் என்ற லெப்ட் முருகன், பவித்ரன், காசிராமன், முத்து இசக்கி, மற்றும் ஐயப்பன் ஆகியோர் மீது திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், கிழக்கு, ஆதர்ஷ் பசேரா, இ.கா.ப, காவல் உதவி ஆணையர், பாளையங்கோட்டை .பிரதீப் ஆகியோரின் பரிந்துரையின்பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர் பா.மூர்த்தி, இ.கா.ப, ஆணைப்படி இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.
0 Comments