திருப்பத்தூர் -ஆகஸ்ட -03,2024
Newz -webteam
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் கடந்த 12 நாட்களாக காவல்துறையினர் மலை கிராமங்களில் முகாமிட்டு கண்காணிக்கப்பட்டதன் மூலம் இன்று 63 சாராய வியாபாரிகள் மனம் திருந்தி மறுவாழ்வு முகாமில் கலந்துகொண்டு மனு அளித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,இ.கா.ப., உத்தரவின் பேரில் 21.07.2024 அன்று முதல் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர்நாடு, சேம்பரை ஆகிய மலை கிராமங்கள் மற்றும் வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதகடப்பாமலை மற்றும் வெலதிகாமணிபெண்டா ஆகிய மலை கிராமங்களில் சாராயம் காய்ச்சுதல் விற்பனை செய்தல் கடத்தல் ஆகியவற்றை முற்றிலும் தடுக்கவும் தலை மறைவு குற்றவாளிகளை கண்காணிக்கவும்
மீண்டும் அவர்கள் குற்றத்தில் ஈடுபடாமல் தடுக்க திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் நாடு மலை கிராமங்களில் திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ரேகாமதி திருப்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் திரு.உலகநாதன் இவர்களின் மேற்பார்வையிலும் வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதகடப்பாமலை
மற்றும் வெலதிகாமணிபெண்டா ஆகிய மலை கிராமங்களில் வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் பழனி வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் நந்தினி தேவி இவர்களின் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் மற்றும் 5 காவலர்கள் அடங்கிய குழு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மலை கிராமங்களில் முகாமிட்டு மிகச்சீறிய முறையில் பணியாற்றியதன் விளைவாக
இன்று புதூர் நாடு மலை கிராமத்தில் சாராய வியாபாரிகள் குற்றம்புரியும் எண்ணத்தை மாற்றி அவர்கள் மீண்டும் பொது வாழ்வில் ஈடுபடுவதாக திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் ராஜசேகரன் அவர்களிடம் இனிவரும் காலங்களில் சாராய வியாபாரத்தில் ஈடுபடமாட்டோம் சாராயம் விற்பனைக்கு துணை போக மாட்டோம் என 46 பேர் மனம் மாறி மனு அளித்துள்ளனர்.
அதேபோன்று வாணியம்பாடி மாத கடப்பா மலை கிராமத்தில் வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் அவர்களிடம் 17 பேர் மனம் மாறி மனு அளித்து 2 சாட்சிகள் முன்பு உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டனர். மனம் மாறி மனு அளித்தவர்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவித் தொகையை பெற்று தருவதாக வருவாய் கோட்டாட்சியர்கள் உறுதி அளித்தனர்.
மாவட்டத்தில் மலை கிராமங்களில் சுமார் 38 கிராம விழிப்புணர்வு குழு மூலம் மது விற்பனை மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்து கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்வில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள்,வருவாய் கோட்டாட்சியர்கள், ஆய்வாளர்கள், மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர்கள், வருவாய் ஆய்வாளர் , கிராம நல அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 Comments