திருநெல்வேலி -ஆகஸ்ட் -21,2024
Newz -webteam
- இடப்பிரச்சனையின் காரணமாக அவதூறு வார்த்தைகளால் பேசி கொலை செய்த வழக்கில் 8 நபர்கள் கைது.
திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 20.08.2024-ஆம் தேதி புகார்தாரரான முக்கூடல் இந்திராகாலனி பகுதியை சேர்ந்த சிவன்பாண்டி (32), தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த அப்பாதுரை மகன் சரவணராஜ்(41) மற்றும் உக்கிரன்கோட்டையை சேர்ந்த சாம்லாவின்(28) ஆகியோர் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் உள்ள ஜோன்ஸ் இன்பராஸ்டெக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் இடத்தை சுத்தம் செய்து, சுற்று சுவர் அமைக்க சென்ற போது- இடப்பிரச்சனையின் காரணமாக எதிர்ப்பு தெரிவித்து வாய் தகராறில் ஈடுபட்டும், அவதூறு வார்த்தைகளால் பேசியும், சாம்லா என்பவரை பாட்டிலால் தாக்கியும், சரவணராஜ் என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த
- பெருமாள்புரம் காவல் துறையினர், விசாரணை செய்து வந்த நிலையில், 20.08.2024-ஆம் தேதி 21.20 மணிக்கு அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணராஜ் என்பவர் உயிரிழந்ததால் கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு எதிரிகளான
- ஆரோக்கியநாதபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் அந்தோணிராஜ்(34), மரிய தாசன் மகன் ஜோசப்(56), பொன்னுச்சாமி மகன் செல்வராஜ்(62), அந்தோணி மகன் ஆகஸ்டின்(37), மார்க்(40), மரிய தங்க சாமி மகன் பிரான்சிஸ்(56), மரியசெல்வராஜ் மகன் பொன்ராஜ்(38) மற்றும் ஆனந்தராஜ் மகன் ராஜேந்திரன் என்ற ஜப்பான் (39) ஆகியோரை கைது செய்து விசாரணை செய்துவருகிறார்கள்.
0 Comments