அரியலூர் -ஆகஸ்ட் -21,2024
Newz -webteam
ஊர்க்காவல் படையில் பணிபுரியும் பெண்ணுக்கு இலவசமாக மின் ஆட்டோ வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வரும் பிரியங்கா என்பவரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு இலவசமாக மின் ஆட்டோ வழங்கினார்.
அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து, 2021 ல் இரண்டு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்தவர் செல்வம். இந்நிலையில் அவரின் மனைவி பிரியங்காவிற்கு 2022 ல் கருணை அடிப்படையில் ஊர்க்காவல் படையில் வேலை வழங்கப்பட்டது. இதனை அடுத்து பிரியங்காவின் வாழ்வாதாரத்தையும் மற்றும் பொருளாதார நிலையையும் உயர்த்தும் பொருட்டு அரியலூர் மாவட்ட ரோட்டரி சங்கம் மற்றும் அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி ஜீவானந்தம் ஆகியோர் மின் ஆட்டோவிற்கு பங்களிப்பு செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று பிரியங்காவிற்கு மின் ஆட்டோ-விற்கான சாவியை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் அவர்கள் வழங்கினார் உடன் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் ஊர்க்காவல் படை வட்டார தளபதி செ.ஜீவானந்தம் ஊர்க்காவல் படை படைத்தளபதி மற்றும் அவரது உறவினர்கள் இருந்தார்கள்
0 Comments