வேலூர் -செப் -05,2024,
Newz – ameen
பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த கும்பல் கைது
வேலூர் மாவட்டத்தை போதையில்லா மாவட்டமாக உருவாக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 01.09.2024-ம் தேதி காட்பாடி காவல் நிலையத்தில் வலி நிவாரணி மாத்திரைகளை விற்றது தொடர்பாக 02 நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று 04.09.2024- தேதி பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை சட்டவிரோதமாக இளஞ்சிறார்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் விற்க்கப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்
மாவட்டகாவல்கண்காணிப்பாளர் .மதிவாணன் உத்தரவின் பேரில் வேலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிருத்விராஜ் சவுகான், பாகாயம் வட்ட காவல் ஆய்வாளர் நாகராஜன் மற்றும் உதவி ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர்களின் தலைமையிலான போலீசார் பாகாயம் அடுத்த முல்லை நகர், முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தபோது
எதிரி கிஷோர்குமார் வ/19 என்பவர் தனது இருசக்கர வாகனத்தின் டேங்க் கவரில் இருந்து ஆரஞ்சு நிறம் கொண்ட மாத்திரைகளான Tapentonal என்னும் வலி நிவாரணி மாத்திரைகளை பிளாஸ்டிக் கவரில் வைத்து வேலூர் முத்துமண்டபத்தை சேர்ந்த இளஞ்சிறார்க்கு விற்க்கும் போது கையும் களவுமாக பிடித்து விசாரித்ததில், எதிரி கிஷோர்குமார் தனது மாமா ரஞ்சித் என்பவர் மூலம் பள்ளிகொண்டவை சேர்ந்த அபிஷேக் என்பவரிடம் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளையும் அதற்கு
பயன்படுத்தும் சிரஞ்சிகளையும் சட்டவிரோதமாக வாங்கி வந்து வேலூர்
கஸ்பாவை சேர்ந்த பூபாலன், ஓல்டு டவுன் விக்னேஷ் மற்றும்
சிவக்குமார் ஆகியோர்களுடன் இணைந்து பள்ளி மற்றும் கல்லூரிகள்
அருகில் உள்ள இளம்சிறார்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து
கடந்த இரண்டு மாதங்களாக விற்பனை செய்து வந்ததாககூறியதையடுத்து, எதிரி கிஷோர்குமாரை கைது செய்தும்,அவரிடமிருந்து 10 வலி நிவாரணி மாத்திரைகள் அடங்கிய 20
பொட்டலங்கள் மற்றும் விற்பனைக்கு எடுத்துச் செல்ல பயன்படுத்திய
HONDA SHINE TN23AC9237 இரு சக்கர வாகனத்தை பறிமுதல்
செய்து எதிரி மற்றும் வழக்கு சொத்துடன் பாகாயம் காவல் நிலையம்
வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்கொண்ட விசாரணையில்
இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான 1.ரஞ்சித் வ/29
த/பெ ரஜினிகுமார். நெ.80 உத்திரமாதா கோயில் தெரு பின்புறம்,
ஒல்ட் டவுன், வேலூர் 2. சிவக்குமார் வ/38 த/பெ மோகன்,
நெ.40/118, பிள்ளையார் கோயில் தெரு, வேலப்பாடி, வேலூர்.
3.பூபாலன் வ/27 த/பெ விரப்பன், நெ.37 பழைய பஜார் தெரு,
கஸ்பா, வேலூர் 4.கிஷோர்குமார் வ/19 த/பெ சின்னதம்பி,
உத்திரமாதா கோயில் தெரு பின்புறம், ஒல்ட் டவுன், வேலூர் மற்றும்
5.விக்னேஷ் வ/19 த/பெ பாபு, செங்காநாத்தம் ரோடு, பாரதியார்
நகர். ஒல்ட் டவுன், வேலூர் என்பவர்களை கைது செய்தும்1. MARUTI CAR TNO2T3148, 2.HONDASHINE TN23AC9237, 3.DIO SCOOTY TN03T9189, 4.PULSAR TN23DF7159, 5.APACHE TN23BA9379 5 1100 Tapentonal மாத்திரைகள், மாத்திரைகள் விற்ற பணம் ரூபாய் 5,000/-யும்,
செல்போன்களையும் கைப்பற்றி மேற்படி நபர்களை நீதிமன்ற
காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் வரும் காவலங்களில் இது
போன்று சிறுவர்களை போதைக்கு அடிமையாக்கும் குற்ற செயல்களில்
ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார் என்பதைதெரிவித்துக் கொண்டார்.
0 Comments