தூத்துக்குடி -செப் -15,2024
Newz -webteam
சிக்கலான சூழ்நிலைகளில் வங்கியை தூக்கி நிலை நாட்ட கடினமாக உழைத்தவர் இயக்குநர் நடுக்காட்டு ராஜா – தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஊழியர்கள் அறிக்கை
துாத்துக்குடி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் நடுக்காட்டு ராஜா பல சிக்கலான சூழ்நிலையின் போதும் வங்கியை அதிக லாபத்தில் செயல்பட சக ஊழியர்களுடன் இணைந்து கடினமாக உழைத்தவர் என தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சக பணியாளர்கள் மற்றும் சக வாடிக்கையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குநர் நடுக்காட்டுராஜவை பத்திரிகை ஒன்றில் செய்தி வௌியாகி இருந்தது. அந்த செய்தி அவதூறானது என்றும் அதற்கு மறுப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சக பணியாளர்கள் மற்றும் சக வாடிக்கையாளர்கள் தரப்பில் அறிக்கை வௌியாகியுள்ளது.
அது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சக பணியாளர்கள் மற்றும் சக வாடிக்கை யாளர்கள் தரப்பில் கூறியுள்ளதாவது:–
”நமது துாத்துக்குடி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் நடுக்காட்டு ராஜா தொடர்பாக கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கையில் அவதூறாக எழுதப்பட்டிருந்தது. வங்கியின் பணியாளர்களை வேலை வாங்குவது என்பது மிகவும் சவாலான ஒன்றுதான். இயற்கையிலேயே நடுக்காட்டு ராஜா இரக்க குணம், ஈகை குணம் மிகுந்த மனிதநேயவாதி என்பதுதான் உண்மை. வங்கிப் பணியாளர்களை அவர்களது மனம் புண்படாதவாறு முகத்தில் எப்போதும் புன்னகையுடன், புன்முறுவல் பூத்தபடி, சமூக சிந்தனையுடனும், நலம் விசாரித்து வேலையை செய்யச் சொல்லுவார். ஒரு பணியாளர் உடல்நிலை சரியில்லாத காரணத்தாலோ அல்லது முடியாத சூழ்நிலையில் முதலில் உடல் நலனைப் பேணு, மருத்துவமனைக்குச் சென்று வந்த பின் வேலையை பார்க்கலாம் என்று தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் அவரது மனித நேயம் எல்லா ஊழியர்களுக்கும் தெரியும்.
அதேபோல் அனைத்து வங்கிகள், சங்கங்களுக்கும் நேரடியாக சென்று பாதிக்கப்பட்டிருக்கும் கீழ் நிலையில் உள்ள சங்கங்கள், வங்கிகள் Com Deficit மற்றும் Loss-ல் இருக்கும் அனைத்து கிளை வங்கிகளுக்கும் பொறுப்புடன் சென்று அவர்களுக்கு என்ன பிரச்சனை உள்ளது, அதை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு அவர்களுக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.
அதனால்தான் கடந்த 17.08.2024ஆம் தேதியன்று நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிப் பேரவைக் கூட்டத்தில் ஏற்கனவே அவரைப் பற்றி அவதூறாக எழுதப்பட்டிருந்த பத்திரிக்கை செய்திக்கு பதில் அளிக்கப்பட்டது. அவர் என்ன செய்துள்ளார் என்பதை பேரவைக் கூட்டம் வாயிலாக பேசப்பட்டது.
பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் பெரிய பதவிக்கு வருவதற்கு உரிமை கிடையாதா? வரக்கூடாதா? இந்தியாவின் சட்டத்தை இயற்றியவரே டாக்டர் புரட்சியாளர் அம்பேத்கர்தான். மட்டுமல்ல இன்று நடுக்காட்டு ராஜா மேலாண்மை இயக்குநராக பதவியேற்ற பின்பு பல சிக்கலான சூழ்நிலையின் போதும் வங்கியை அதிக லாபத்தில் செயல்பட சக ஊழியர்களுடன் இணைந்து கடினமாக உழைத்துள்ளார்.
ஆனால் அவரைப் பற்றி தேவையில்லாமல் அவதூறாக எழுதியுள்ளர்கள். ஆனால் இதுவரை பதவி வகித்து வந்த தலைவர்கள், அதிகாரிகள் பற்றி பட்டியல் எடுத்துப் பார்த்து, அவர்கள் செய்துள்ள பணிகளுடன் தற்போதுள்ள இயக்குநர் நடுக்காட்டு ராஜாவின் செயல்பாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் யார் யார் என்ன செய்தார்கள் என்று தெரியவரும்.
அதாவது அவர் அவருடைய கடமையை ஒரு சமூக சிந்தனையோடு ஒரு நட்புறவோடு சகோதரத் தன்மையுடன் அதுவும் ஆய்வுக் கூட்டமாக இருந்தாலும் சரி, சக பணியாளர்களின் கலந்தாய்வு கூட்டமாக இருந்தாலும் சரி ஒரு அதிகாரி என்பது மட்டுமல்லாமல் ஒரு நட்பு ரீதியாகவே நடந்து கொள்வார். ஒரு சில காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் அவதூறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்
இயக்குநர் நடுக்காட்டு ராஜாவை பற்றி அவதூறு செய்திகளைப் பரப்ப பரப்ப அவர் மேலும் உயர்ந்த பதவிக்கு சென்று கொண்டிருப்பார் என்பது உறுதி என்பதை சக பணியாளர்கள் மனநிலையாக உள்ளது
0 Comments