மதுரை -செப் -20,2024
Newz -webteam
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கன்னிவாடி அருகில் வாகன விபத்தாகி தலைக்காயப் பிரிவில் சிகிச்சையில் இருந்த கோயமுத்தூர் ரத்தினபுரியை சேர்ந்த சாந்தி
வயது 47 என்பவர் மூளைச் சாவு அடைந்ததையடுத்து அவருடைய உடல் உறுப்புகளை உறவினர்கள் தானம் செய்ய முன் வந்ததின் பெயரில் அவரது இதயம் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல காவல்துறையின் உதவி தேவை என மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களது உத்தரவின் படி (green corridor) போக்குவரத்து காவலர்கள் மூலமாக போக்குவரத்தை சீர் செய்து முக்கிய சந்திப்புகளில் வாகன சிக்னல்களை கண்காணித்து பொது மக்களுக்கு இடையூறு இன்றி உரிய நேரத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
0 Comments