திருநெல்வேலி -செப் -24,2024
Newz -webteam
திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட TVS நகரில் கடந்த 21.09.2024-ஆம் தேதி மாலை சுமார் 04.30 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு ஸமாஜம் வரும் வழியில் 14வது தெற்கு தெரு முக்கில் (சர்ச்சுக்கு மிக அருகாமையில்) வரும் பொழுது அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் பைக்கில் வந்து தன் மகன் அகிலேஷ் அணிந்திருந்த பூணுலை அறுத்துவிட்டு, இதுபோல் பூணுல் அணிந்து வரக்கூடாது என்று மிரட்டிவிட்டு சென்றதாக அகிலேஷின் தந்தை சுந்தர் கொடுத்த புகாரின் பேரில் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் 460/2024-ன்படி CSR பதிவு செய்யப்பட்டது.
முதற்கட்ட விசாரணை:
இப்புகார் தொடர்பாக காவல் துறையினரால் 21.09.2024-ஆம் தேதியில் அகிலேஷ் என்பவர் சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடத்திலும் மற்றும் சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட சாலையிலும் உள்ள ஐந்து இடங்களில் CCTV காமிரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும் சம்பவ இடத்தில் உள்ள ஆறு சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டது. மேற்படி பதிவுகளில் சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் மற்றும் நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனங்களில் யாரும் அகிலேஷ் என்பவரிடம் வந்து பூணுலை அறுத்ததாக பதிவுகள் இல்லை. அகிலேஷ் என்பவர் சம்பவ இடம் தாண்டி பொறுமையாக நடந்து வந்து தனக்கு தெரிந்தவர்களிடம் பேசி பின் திரும்பி செல்வதாக பதிவாகி உள்ளது.
மேற்படி CCTV காமிரா பதிவுகளை பார்வையிட்டதிலிருந்தும், சம்பவ இடத்தில் இருந்த சாட்சிகளை விசாரணை செய்ததிலிருந்தும் அகிலேஷ் என்பவர் கூறியபடி நான்கு பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து அவர் அணிந்திருந்த பூணுலை அறுத்து சென்றதாக காவல்துறை விசாரணையில் புலப்படவில்லை. எனினும் காவல் துறையினர் மேற்படி சம்பவம் குறித்து தொடந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments