தாம்பரம் – அக்-02,2024
Newz -webteam
தாம்பரம் மாநகர காவல் சேலையூர் சரகம் சிட்லபாக்கம் காவல் நிலைய MIT கல்லூரி பாலம் சர்வீஸ் சாலையில் 17.09.2024 ம் தேதி காலை சுமார் 06.45 மணியளவில் வாக்கிங் (நடைபயிற்சி) சென்றுக் கொண்டுயிருந்த தசாந்தகுமாரி வ/69 க/பெ கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் இருந்து சுமார் 5 சவரன் தங்க செயினையும் மேலும் 22.09.2024-ம் தேதி பகல் சுமார் 03.15 மணிக்கு .சாந்தி வ/57 க/பெ சண்முகம் என்பவர் கழுத்தில் இருந்து சுமார் 4.1/2 சவரன் தங்க செயினையும் இரு சக்கர வாகனத்தில் (Pulsar) வந்து அறுத்துச் சென்ற இவ்விரு வழக்கிலும் சிட்லபாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது
மேற்படி வழக்கை, துரிதமாகவும் தீவிரமாகவும் விசாரிக்க கனம் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவின் பேரில் பள்ளிக்கரணை துணை ஆணையர் ஆலோசனையின்படி சேலையூர் சரக உதவி ஆணையர் நேரடி மேற்பார்வையில் சிட்லபாக்கம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படையினர் இவ்விரு சம்பவ இடங்களில் இருந்து தொடர்ந்து சேகரிக்கப்பட்ட CCTV பதிவுகளை கொண்டு
எதிரி சென்ற வழித்தடங்களான பல்லாவரம் குன்றத்தூர் காஞ்சிபுரம் காவேரிப்பாக்கம் வாலாஜா ஆற்காடு வேலூர் ஆகிய வழித்தடங்களில் உள்ள சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட CCTV பதிவுகளில் கிடைத்த தகவலின் பேரில் வேலுர் வரை சென்று திரும்ப சென்னை நோக்கி வந்த மர்ம நபரை சுமார் 350 கிலோமீட்டர் தூரம் பின்தொடர்ந்து பூந்தமல்லி மதுரவாயல் புழல் மாதாவரம் பெரம்பூர் ஆகிய பகுதியில் உள்ள CCTV பதிவுகளின் கிடைத்த தரவுகளில் எதிரியை
மாதாவரம் பேருந்து நிலையத்தில் வைத்து இன்று சிட்லபாக்கம் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து குற்றவாளியான சசி வ/52 த/பெ குஞ்சுகுட்டி கொச்சவழியத்து பனயல் வீடு பெரியநாடு அஞ்சல் திருக்கடவுர் கிராமம் அஞ்சாலிமூடு கொல்லம் கேரளா மாநிலம் என்பவரை கைது செய்து விசாரிக்க, இவர் மீது 1995 முதல் 2000 வரை டேவிட் பிஜீ என்ற பெயரில் குரோம்பேட்டை பல்லாவரம் சங்கர்நகர் பூந்தமல்லி ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டு இருந்ததும்
மேலும் 2000 முதல் 2019 வரை கேரளா மாநிலம் கொல்லம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் சுமார் 25 க்கும் மேற்பட்ட சங்கலி பறிப்பு வழக்குகளில் சம்மந்தப்பட்டு உள்ளதும் தற்போது தாம்பரம் சிட்லபாக்கம் பகுதியில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவருகிறது.மேற்படி விசாரணைக்கு பின்னர் எதிரியை தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி புழல்சிறையில் அடைக்கப்பட்டார்.
CCTV கேமரா பதிவுகளை தொடர்ந்து சென்று ஆய்வு செய்து குற்றவாளியை மிக துரிதமாகவும் திறமையாகவும் கைது செய்த சேலையூர் சரகம் சிட்லபாக்கம் காவல் நிலைய தனிப்படை ஆளினர்களை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்
0 Comments