சென்னை -அக் -08,2024
Newz -webteam
தமிழகத்தில் ஓராண்டில் 90 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் காவல்துறை பரபரப்பு அறிக்கை
தமிழகத்தில் ஓராண்டில் சுமார் 90 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சார்பில் பரபரப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில், “ஆபரேஷன் பரிவர்தன்” எனும் திட்டத்தின் கீழ் 4,000 மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டு, 6,416 ஏக்கர் கஞ்சா வயல்கள் அழிக்கப்பட்டன. இது போன்ற நடைமுறைகளில் காவல்துறை முக்கிய பங்காற்றி வருகிறது.
2022 ஆம் ஆண்டில் என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் 10,665 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதன் விளைவாக 14,934 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர், 28,383 கிலோ கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
2023 மற்றும் 2024 ஆகஸ்ட் மாதம் வரை, 9,750 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, 6,053 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 90,833 கிலோ கஞ்சா மற்றும் 93 கிலோ மெத்தாம்பைன் போன்ற பைரல் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
டிரைவ் அகென்ஸ்ட் ட்ரக் (DAD) என்ற திட்டத்தின் மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. NSS, NCC போன்ற இளைஞர் அமைப்புகளின் மூலம் 18,000 மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டின் ஜூன் 26 அன்று, உலக சாதனை முயற்சியாக காவல்துறையால் 7,000 மாணவர்களுடன் கூட்டாக போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
போதைப்பொருள் தொடர்பான தகவல்களை அளிக்க மையத்தை தொடர்பு கொள்ள 10581 என்ற இலவச எண் வழங்கப்பட்டு, பொதுமக்கள் இந்த எண் வழியாக தங்கள் குறைகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு காவல்துறை பல்வேறு தடுப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு, போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் எதற்கும் இடமில்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருள் ஒழிப்பில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
இவர் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments