சென்னை -அக் -15,2024
Newz -webteam
தமிழ்நாடுகாவல் துறை தலைவர் இன்று சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள காவல் துறைத் தலைவர். செயலாக்கம் அலுவலத்தில் செயல்பட்டுவரும் பருவமழை தொடர்பான மாநில காவல் சிறப்பு கட்டுப்பாட்டறையை நேரில் சென்று அது செயல்படும் விதம் மற்றும் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, காவல் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.
மேலும், காவல் துறை தலைவர் அவர்கள் கன மழை/ அதிக கன மழை பெய்யும் பகுதிகள், தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகள் மற்றும் நீரில் மூழ்கி நீர் தேங்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்ட சாலைகளின் கண்காணிக்கவும் அறிவுரைகளை வழங்கினார். நிலை ஆகியவற்றைக்
இங்கு தயார் நிலையில் உள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படையின் 06 பேரிடர் மீட்பு குழுக்களை நேரில் சந்தித்து தக்க அறிவுரைகளை வழங்கினார்.
மேலும், பேரிடர் மீட்பு தொடர்பான உபகரணங்களையும் ஆய்வு செய்தார்.
இந்த கட்டுப்பாட்டறையானது மாநில அவசரநிலை மையம் (SEOC), மாவட்ட அவசரநிலை மையங்கள் (DEOC) மற்றும் காவல் துறையில் உள்ள அனைத்து மாவட்ட மாநகர கட்டுப்பாட்டறைகளுடன் தொடர்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments