திருநெல்வேலி -அக் -25,2024
Newz -webteam
மது மற்றும் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நேருயுவ கேந்திரா மற்றும் திருநெல்வேலி மாநகர காவல் துறையினர்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப, உத்தரவின் பேரில், காவல் துணை ஆணையர் (கிழக்கு) விஜயகுமார் தலைமையில் மது மற்றும் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட நேரு யுவ கேந்திராவுடன் இணைந்து காவல் துணை ஆணையர் (கிழக்கு) விஜயகுமார் அவர்கள் தலைமையில் தன்னார்வலர்களாக வரும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மது மற்றும் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் தன்னார்வலர்களாக சிறந்த முறையில் பணியாற்றிய மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்
உடன் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உதவி ஆணையர், மதுவிலக்கு அமலாக்க பிரிவு (PEW) காவல் ஆய்வாளர் இந்திரா மற்றும் காவல் துறையினர் தன்னார்வலர்கள் 50 நபர்கள் கலந்துகொண்டனர்
0 Comments