திருவாரூர் – நவ – 22,2024
Newz – Webteam
திருவாரூர் மாவட்ட காவல்துறையில் திருச்சி மண்டல ஐஜி மற்றும் தஞ்சாவூர் சரக டிஐஜி ஆய்வு.
திருவாருர் மாவட்டத்தில் எதிர்வரும் 30.11.2024-ந் தேதி இந்திய ஜனாதிபதி தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் பட்டம் அளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி சிறப்பிக்க உள்ளார். அது தொடர்பாக திருச்சி மண்டல காவல் துறைத்தலைவர் கார்த்திகேயன் இ.கா.ப., , தஞ்சாவூர் சரக காவல் துறை துணைத்தலைவர் ஜியாவுல் ஹக் இ.கா.ப., , திருவாருர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், M.Sc, (Agri.,) திருவாருர் மத்திய பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார்
பின்னர் திருச்சி மண்டல ஐஜி திருவாருர் மாவட்டகாவல் அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் குற்ற காவல் நிலையத்தை ஆய்வுமேற்கொண்டு வழக்கு கோப்புகளை ஆய்வு செய்தும், ஒவ்வொரு குற்ற வழக்கிலும்ஆன்லைன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படி பணத்தினை திரும்ப பெற்றுத்தருவதை
உறுதி செய்து கொள்ளவேண்டும். பொதுமக்களும், பள்ளி LOIT 6001621. மாணவிகள்அனைவரும் தற்போது செல்போன் உபயோகிப்பதால் ஆன்லைன் வழியே எந்தவித
ஏமாற்றமும் அடைய கூடாது என்ற விதத்தில் அடிக்கடி விழிப்புணர்வு நடத்தவேண்டும் என
கூறினார்
.மேலும், மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடத்தை ஆய்வு மேற்கொண்டு காவல்
நிலையங்களில் பதிவு செய்யப்படும் குற்ற வழக்குகளின் நடவடிக்கைகளை கூர்ந்து
கண்காணிக்கவேண்டும், வழக்குகளில் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் குற்றஅறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறதா என்பதையும், வழக்குகள் நீதிமன்றத்தில்தண்டனையில் முடித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். காணாமல் போனநபர்களின் விபரங்களை தமிழ்நாடு காவல் வெப்சைட்டில் பதவி செய்து மற்றமாவட்டங்களுடன் இணைந்து காணாமல் போனவரை கண்டுபிடிக்க நடவடிக்கைமேற்கொள்ளவேண்டும்.
பாஸ்போர்ட் சம்மந்தப்பட்ட விசாரணையை உடனுக்குடன் முடித்துஅனுப்பிட வேண்டும் கூறினார் அப்போது திருவாருர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஜெயக்குமார், M.Sc, (Agri.,) , கூடுதல் காவல்கண்காணிப்பாளர் அருட்செல்வன், மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூட துணைக்காவல்
கண்காணிப்பாளர் பிலிப் பிராங்ளின் கென்னடி, காவல் ஆய்வாளர்கள்
R. மணிமேகலை, தியாகராஜன் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜா
ஆகியோர் உடனிருந்தனர்
0 Comments