திருநெல்வேலி – நவ – 26,2024
அருவாளைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
திருநெல்வேலி டவுணைச் சேர்ந்த, ஆனந்தராஜ் என்பவரை அருவாளைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்த திருநெல்வேலி டவுண் பகவத்சிங் தெருவை சேர்ந்த இசக்கி மகன் சீனிவாசன்(24) என்பவர் மீது திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், மேற்கு, .கீதா, திருநெல்வேலி டவுண் சரக காவல் உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் திருநெல்வேலி டவுண் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், .ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப, அவர்களின் உத்தரவின்படி 26.11.2024-ம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.
மேலும் அதேபோல் பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை, கம்பராமாயண தெருவை சேர்ந்த பழனி மகன் பேராட்சிசெல்வம் என்ற கருப்புசெல்வம்(27) என்பவர் மீது திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், கிழக்கு, விஜயகுமார், காவல் உதவி ஆணையர், பாளையங்கோட்டை சரகம் சுரேஷ், பாளையங்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் தில்லைநாகராஜன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், .ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., அவர்களின் ஆணைப்படி 26.11.2024-ஆம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
0 Comments