திருநெல்வேலி – நவ – 27,2024
Newz – Webteam
புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கி வாழ்த்து தெரிவித்த திருநெல்வேலி சரக டிஐஜி .
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2023ம் ஆண்டிற்கான 3359 இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பு காவலர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதனை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட பகுதியில் வெற்றி பெற்று தேர்வான காவல்துறையினர் 50 நபர்கள், தீயணைப்புத் துறையினர் 7 நபர்கள் ஆக மொத்தம் 57 நபர்களுக்கு
இன்று 27.11.2024 ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். மூர்த்தி இ.கா.ப., பணி நியமன ஆணைகளை வழங்கி, காவல்துறையில் பணியாற்றுவது பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் ஒரு உன்னதமான பணியாகும், நீங்கள் நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடித்து பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்,
அதே போன்று பொதுமக்களுக்கு உதவுவதிலும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் அனைவரிடமும் ஒற்றுமையை கடைபிடித்து நேர்மையாகவும், சேவை மனப்பான்மையுடனும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன்., 12 வது பட்டாலியன் உதவி தளவாய் பூபதி , திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர் வினோத் மற்றும் காவல் அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
0 Comments