கரூர் – பிப் 01,2025
Newz – Webteam
இன்று கரூர் மாவட்ட ஆயுதப்படையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான்அப்துல்லா IPS.,, உத்தரவின் பேரில் கவாத்து பயிற்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கலந்துகொண்டு கவாத்து நிகழ்ச்சியை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது காவலர்களின் நிறைகுறைகளை கேட்டறிந்தார்.
மேலும் 76-வது குடியரசு தின விழாவில் கவாத்து அணிவகுப்புபில் கலந்துகொண்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா IPS., பாராட்டு சான்றிதழ் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
0 Comments