திருநெல்வேலி – பிப் -01,2025
Newz -webteam
துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன் இரு சக்கர ரோந்து வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்த மாநகர காவல் துணை ஆணையர்கள்
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் திரு.சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி காவல் துணை ஆணையர்கள் (மேற்கு) .கீதா அவர்கள், (கிழக்கு) வினோத் சாந்தாராம் அவர்கள், (தலைமையிடம்) S.விஜயகுமார் அவர்கள், ஆகியோரின் மேற்பார்வையில் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
கடந்த (11.01.2025ஆம் தேதி) மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் குற்ற சம்பவங்கள், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் தீவிரமாக கண்காணிக்க, காவல் துணை ஆணையர்கள் தலைமையில் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் பாளையங்கோட்டை சரகத்திற்கு 2 இரு சக்கர ரோந்து வாகனங்களும், சந்திப்பு, டவுண், மேலப்பாளையம் சரகத்திற்கு தலா 1 இரு சக்கர ரோந்து வாகனங்கள், என மொத்தம் 05 இரு சக்கர ரோந்து வாகனங்கள் (துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன்) துவக்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காவல் துணை ஆணையர்கள் (கிழக்கு) வினோத் சாந்தாராம் , (தலைமையிடம்) விஜயகுமார் தலைமையில் மேலும் 4 இரு சக்கர ரோந்து வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
தற்போது மாநகரத்தில் 07 காவல் நிலையங்களுக்கு தலா 01 இரு சக்கர ரோந்து வாகனங்கள் மற்றும் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு 02 இரு சக்கர ரோந்து வாகனங்கள் என 09 இரு சக்கர ரோந்து வாகனங்கள் (துப்பாக்கி ஏந்திய காவலர்களுடன்) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
0 Comments