இராணிப்பேட்டை – பிப் -01,2025
Newz -webteam
சுமார் 8 லட்சம் மதிப்புள்ள 80 செல்போன்களை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்பி ஒப்படைப்பு
இன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இ.கா.ப., தலைமையில் பொதுமக்கள் தவறவிட்ட/களவு போன சுமார் 80 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூபாய் 8,00,000 ஆகும்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் யாரேனும் செல்போன் தவறவிட்டால் உடனடியாக காவல்துறைக்கு புகார் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இணைய வழிய குற்றங்கள் தொடர்பாக உதவி எண்:- 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் என்று எடுத்துரைத்தார்.இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கஞ்சா/குட்கா/ போதை பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளிக்க 89039 90359 என்ற whatsapp எண் மூலமாக தெரிவிக்கலாம்.
உடன் துணை காவல் கண்காணிப்பாளர்கள் ரமேஷ் ராஜ் (DCB), வெங்கடக்கிருஷ்ணன் (IUCAW), காவல் ஆய்வாளர் அருண்குமார் (மாவட்ட தனிபிரிவு), உதவி ஆய்வாளர் தியாகராஜன் (CCPS), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments