திருநெல்வேலி – ஏப் -16,2205
Newz – Webteam
திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பில் கலெக்டர் காளி வசந்தை பொறிவைத்து பிடித்துள்ளனர்.
பால் சிங் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார் அவருடைய தந்தை பெயர் மீனாட்சிசுந்தரம் தந்தையின் பெயரிலிருந்து தன்னுடைய பெயரில் சொத்து வரியை பெயர் மாற்றம் செய்வதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக விண்ணப்பித்துள்ளார் பெயர் மாற்றம் செய்யப்படாமல் இருந்துள்ளது இந்நிலையில் நேரடியாக காளி வசந்திடம் சென்று விவரம் கேட்டபோது ரூ.4000 லஞ்சம் கேட்டுள்ளார்.
பால்சிங்க் திருநெல்வேலி மாவட்டம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை அணுகி உள்ளார்.
அதைத்தொடர்ந்து
இன்று மாலை 3மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்பி எஸ்கால் தலைமையில் போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை பால் சிங்யிடம் கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர் அதனை காளி வசந்த் வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

0 Comments