கன்னியாகுமரி – ஏப் – 25,2025
Newz – Webteam
விரிசுருள் சிரையினால் (varicose veins) னால் பாதிக்கப்பட்ட போலீசாருக்கு சிறப்பு மருத்துவ முகாம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். ஸ்டாலின் IPS காவலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியான மனம் திறந்து நிகழ்ச்சிகளின் போது பல போலீசார் விரிசுருள் சிரை நோய் (varicose veins) னால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருந்தனர்.


அதன் அடிப்படையில் மாவட்ட முழுவதும் இதனால் பாதிக்கப்பட்டுள்ள போலீசாரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாவட்ட ஆயுதப்படையில் நாளை26-04-25 நடைபெறவிருக்கும் மாபெரும் மருத்துவ முகாமில் சமுதாய நல கூடத்தில் வைத்து சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
பாதிக்கப்பட்ட போலீசாருக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது . மேலும் இந்தப் பிரச்சினை அதிகரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட போலீசாருக்கு Compression varicose vein stockings (சுருக்கு வெரி கோஸ்ட் வெயின் காலுறைகள்) வழங்கப்பட உள்ளது.
0 Comments