திருநெல்வேலி – ஏப் -28,2025
Newz – Webteam


திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா சாரா டக்கர் காலேஜ் ரோடு என்ற முகவரியில் வசித்து வரும் சுந்தரம் அவர்களின் குமாரர் சிவ சண்முகவேல் (வயது 63) இவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஆவார் இவர் திருநெல்வேலியில் உள்ள ஷாரோன்ஆட்டோ (Sharon Auto)தனியார் நிறுவனத்தில் யமஹா ஃபேஷன் என்ற வாகனத்தினை ரூபாய் 1, 25,000/- கொடுத்து வாங்கி உள்ளார்
வாகனத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் ப்ளூடூத் பொருத்தப்பட்டுள்ளதாகவும் வாகனம் திருட்டு போனாலும் அல்லது காணாமல் போனாலும் அல்லது வேறு யாராவது எடுத்துச் சென்றாலோ வாகனத்தினை செல்போனின் மூலம் வாகனம் எந்த இடத்தில் உள்ளது என்பதை கண்டறிய முடியும் எனவும் தொழில்நுட்பத்தை பொருத்துவதற்கு ப்ளூடூத் ரூபாய் 18000 கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ப்ளூடூத் பொருத்தப்பட்ட வாகனத்தினை வாங்கி உள்ளார்
ப்ளூடூத் ஆனது தொடர்ந்து பலமுறை முயற்சி செய்தும் செல்போனோடு இணைக்க முடியவில்லை அதற்காக அதற்கு பல்வேறு காரணங்களை சொல்லி ப்ளூடூத்தை இணைப்பதை காலதாமதப்படுத்தி வந்துள்ளது தனியார் நிறுவனம்
ப்ளூடூத் சரியான முறையில் செயல்படவில்லை
ப்ளூடூத் குரிய கட்டணத்தினை திரும்ப கேட்டு உள்ளார் தனியார் நிறுவனம் தர மறுத்து விட்டது
மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்ட சிவசண்முகவேல் வழக்கறிஞர் பிரம்மா மூலம் திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார் வழக்கினை விசாரணை செய்த ஆணைய தலைவர் கிளடஸ் டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் கனகசபாபதி ஆகியோர் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூபாய் 15,000/- ப்ளூடூத் கட்டணம் ரூபாய்18000/- ம் நாளது தேதி வரை 6% வட்டியும் மற்றும் வழக்குச் செலவு ரூபாய் 7,000/- சேர்த்து மொத்தம் ரூபாய் 40,000 /- ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் தவறினால் ஒன்பது சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்
0 Comments