திருநெல்வேலி மாநகர எல்கைக்குள் நுழைய தடை காவல் ஆணையர் உத்தரவு
மாநகர எல்கைக்குள் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு அச்சம், ஆபத்து மற்றும் தீங்கு விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை சென்னை மாநகர காவல் சட்டம் பிரிவு 51-A ன் படி மாநகர எல்கைக்குள் நுழைய தடை விதிக்கும் அதிகாரம் காவல் ஆணையருக்கு உள்ளது.
அதன்படி திருநெல்வேலி மாநகரம், பேட்டை, பாண்டியாபுரம், தெற்கு தெருவைச் சேர்ந்த முருகன் மகன் முத்துகுமார் என்பவர் மீது 6, வழக்குகள் உள்ளது எனவே 28.04.2025-யிலிருந்தும் மற்றும் பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, இளங்கோ நகர், குட்டத்துறை, கீழத்தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் படுகையூர் பாஸ்கர் என்பவர் மீது 34, வழக்குகளும் உள்ளது எனவே 29.04.2025 யிலிருந்தும் ஆறு மாதங்களுக்கு நீதிமன்ற வழக்கு விசாரணை, காவல்துறை வழக்கு விசாரணை போன்ற காரணங்களைத் தவிர இரண்டு பேரும் திருநெல்வேலி மாநகரின் காவல் எல்கைக்குள் நுழைய திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப.தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்

0 Comments