கோயம்புத்தூர் – மே -03,2025
Newz – Webteam


கோவை மாவட்ட போக்குவரத்து காவலர்களுக்கு கோடை வெயிலில் இருந்து தங்களை பாதுகாக்கும் பொருட்டு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.…
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கோவை மாவட்டத்தில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களின் நலன் கருதியும், கோடை வெயிலில் இருந்து அவர்களை பாதுகாக்கும் பொருட்டும், கோடை வெயிலில் சிறப்பாக பணிபுரிய ஏதுவாக பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி போக்குவரத்து காவலர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., இன்று மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தொப்பி, கண் கண்ணாடி மற்றும் பழச்சாறுகள் வழங்கினார். மேலும் போக்குவரத்து போலீசார் அனைவருக்கும் கோடைக்காலம் முடியும் வரை பழச்சாறுகள் வழங்கும்படி அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
0 Comments