தூத்துக்குடி – மே -07,2025
Newz – Webteam

திருச்செந்தூர் கடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில் பாதுகாப்பு அலுவலில் தங்கம்,பொற்செல்வன், முத்துமாலை, சித்ரா தேவி ஆகியோர்கள் இருந்தபோது திருநெல்வேலி மாவட்டம், படுக்கப்பத்து ஊரைச் சேர்ந்த ராஜு அவரது மனைவி ஜெயசுதா மற்றும் குடும்பத்தினரோடு திருச்செந்தூர் வந்து கடலில் நீராடியபோது
ஜெயசுதா என்பவர் கடலுக்குள் அலையினால் இழுத்துச் செல்லப் பட்டவரை பணியிலிருந்த மேற்கண்ட காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படை சுதாகர், சூர்யா மற்றும் கடலோர பாதுகாப்பு குழுவினருடன் சேர்ந்து மேற்படி பெண் பக்தரை மீட்டு முதல் உதவி சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். மேற்படி ஜெயசுதா என்பவர் தற்சமயம் நலமுடன் இருக்கிறார்
0 Comments