

விழுப்புரம் – மே – 11,2025
Newz – Webteam
விழுப்புரம் மாவட்ட காவல்துறை
அசாத்திய மோப்ப சக்தியுடன் செயல்பட்ட மோப்ப நாய் ராக்கிக்கு பாராட்டு
விழுப்புரம் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் இயங்கி வரும் மோப்ப நாய் படைப்பிரிவில் குற்ற சம்பவங்களை துப்பறிய ராக்கி மற்றும் ஏஸ் (ACE) ஆகிய மோப்ப நாய்களுக்கும். வெடிப்பொருள்களை துப்பறிய தமிழ் மற்றும் ராணி ஆகிய மோப்ப நாய்களுக்கும் சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நமது மாவட்டத்தில் போதைப்பொருள்களை துப்பறிய புதியதாக பஸ்டர் என்ற மோப்ப நாய்க்கு சிறப்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட T.தேவனூர் கிராமத்தில் கடந்த 06.05.2025 இரவு பூட்டிய வீட்டினை உடைத்து கன்னக்களவு செய்து தங்க நகைகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் தொடர்பாக அசாத்திய மோப்ப சக்தியுடன் செயல்பட்ட மோப்ப நாய் ராக்கி(10) மற்றும் அதன் பயிற்றுனர் தலைமை காவலர் செல்வகுமார், எதிரிகளை கைது செய்ய உதவியதற்க்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சரவணன் இ.கா.ப., நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
0 Comments