திருநெல்வேலி – ஜீன் -21,2025
Newz – Webteam


11வது சர்வதேச யோகா மருத்துவக் கல்லூரி தினம் திருநெல்வேலி மருத்துவமனையில் மருத்துவமனையின் முதல்வர் ரேவதிபாலன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ரேவதி பாலன் விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
யோகா மற்றும் அதன் பயன்கள் குறித்து யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவின் உதவி மருத்துவ அலுவலர் மரு.கா. உமாமகேஸ்வரி எடுத்துரைத்து செயல் விளக்கப் பயிற்சி அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவர்கள் கலந்து பயிற்சி செய்தனர்.மேலும் இவ்விழாவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. பாலசுப்பிரமணியன், உதவி உறைவிட மருத்துவஅலுவலர் மரு.எஸ்தர், பொது மருத்துவத்துறையின் தலைவர் மரு. இரத்தினகுமார் மற்றும் செவிலியர் பயிற்சிப் பள்ளி பயிற்றுநர்கள், யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments