
விழுப்புரம் – ஜீன் -30,2025
Newz – Webteam
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சஞ்சீவீராயன் பேட்டை பகுதியில் கடந்த 17 ஆம் தேதி நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து 10 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு
இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்களை விரைவாக கைது செய்த திண்டிவனம் உட்கோட்ட தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் ஐய்யப்பன், தலைமை காவலர் ஜனார்த்தனன், கோபாலன், முதல் நிலை காவலர் செந்தில் முருகன் கோபாலகிருஷ்ணன் மற்றும் சிரஞ்சீவி ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப., நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
0 Comments