விழுப்புரம் – ஜீலை – 03,2025
Newz – Webteam



விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜிஆர்பி தெருவில் புதிதாக சிறுவர் மன்றம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், இ.கா.ப., தலைமையில் நேற்று மாலை திறந்து வைத்தார்
இந்த சிறுவர் மன்றத்தில் மாணவர்கள் பள்ளி முடிந்து மாலை நேரங்களில் பொது அறிவு வளர்த்திடவும், தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் போட்டி தேர்வுக்கு ஆயத்தமாக பயிற்சி மேற்கொள்ள வழிவகை செய்ய பல்வேறு பொது அறிவு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார் படித்துக்கொள்ளும் வகையில் புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாணவர்களின் எதிர்கால நலன் குறித்தும், உடல் ஆரோக்கியம் குறித்தும் அறிவுரைகள் வழங்கி பேசுகையில் தங்கள் பகுதியில் இருந்து மருத்துவத் துறையில் 20 நபர்களும், தமிழ்நாடு காவல்துறையில் 15 நபர்களும், வழக்கறிஞர்களாக 14 நபர்களும், கல்வித்துறையில் 12 நபர்களும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று ஊழியர்களும், ரயில்வே துறையில் 3 ஊழியரும், வருவாய் துறையில் 8 ஊழியர்களும், மின்சாரத் துறையில் 3 ஊழியர்களும், நெடுஞ்சாலை துறையில் ஒரு நபரும், நீதிமன்ற ஊழியராக ஒரு நபரும், இதர அலுவலக ஊழியர்கள் 4 நபர்களும், நகராட்சி ஊழியர்கள் 13 நபர்களும், அங்கன்வாடி ஆசிரியர்களாக 6 நபர்களும் அரசு பணியில் இருப்பதாக தெரிவித்தார். இவ்வாறு மாணவ மாணவிகள் தங்கள் அறிவு திறனை வளர்த்துக் கொண்டு அரசு துறையில் சாதிக்க வேண்டும் என ஊக்கப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்
.ரவீந்திரகுமார் குப்தா, இ.கா.ப.,, உதவி ஆட்சியர் திரு.வெங்கடேஸ்வரன் இ.ஆ.ப., (பயிற்சி) மற்றும் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கல்பனா மற்றும் காவலர்கள், பள்ளி மாணவர்கள் 50 பேர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் வேல்முருகன் கலந்து கொண்டனர்.
0 Comments