விழுப்புரம் – ஜீலை -09,2025
Newz – Webteam
வாகனத் தணிக்கையின் போது பட்டாகத்தியுடன் வந்த மூவரை கைது செய்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்
கடந்த 04.07.2025 தேதி அன்று விக்கிரவாண்டி டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் மூவர் பட்டாகத்தியுடன் இருந்ததை கண்டறிந்து நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில்
எதிரிகள்.
1.செந்தில்குமார் (47) பிள்ளையார் கோவில் தெரு, சிங்கனூர் திண்டிவனம்,
2.நவீன்(29) கொளப்பாக்கம் சென்னை,
3.சையது (27) ஓட்டேரி சென்னை
ஆகியோர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில்குமார் என்பவரை (பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில்) கொலை செய்ய திட்டம் தீட்டி வந்ததாக தெரியவந்தது.
துரிதமாக செயல்பட்டு வாகனத் தணிக்கையில் பட்டாகத்தியுடன் வந்த மேற்கண்ட எதிரிகள் மூவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிறப்பாக பணிபுரிந்த
விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளர் சத்தியசீலன்,
உதவி ஆய்வாளர் மணிகண்டன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜ், தனி பிரிவு தலைமை காவலர் ராமலிங்கம் மற்றும் போக்குவரத்து காவல் நிலைய முதல் நிலை காவலர் ராஜேஷ் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் IPS., இன்று நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

0 Comments