கோயம்புத்தூர் – ஜீலை – 09,2025
Newz – Webteam



கோவை மாவட்ட காவல்துறையினர் அதிரடி – 235 கிலோ கஞ்சா பறிமுதல் – 2 பேர் கைது!
போதைப் பொருட்களை ஒழிக்கும் கோவை மாவட்ட காவல்துறையின் கடுமையான நடவடிக்கை!
கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழித்து, போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், இ.கா.ப., நேரடி மேற்பார்வையிலும், வழிகாட்டலிலும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது, TN 06 R 1959 என்ற எண் கொண்ட வொல்க்ஸ்வேகன் காரில் சதீஷ்குமார் (36) (தூத்துக்குடி மாவட்டம்) மற்றும் வேதமணி (27) (வேதாரண்யம், நாகப்பட்டினம் மாவட்டம்) ஆகியோர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் வந்த காரினை சோதனை செய்தபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 70 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 235 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்படி குற்றவாளிகளை கைது செய்து விசாரிக்கையில், அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஆந்திர மாநிலத்தில் இருந்து வாங்கி, வேறு மாநிலத்திற்குத் கடத்தி செல்வதற்காக வைத்திருந்தனர் என்பதை விசாரணையில் தெரிவித்தனர்.
மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக சூலூர் காவல் நிலையத்தில் குற்ற. எண்: 662/2025 U/S 8(c), 20(b)(ii)(C), 25, 29(1) NDPS Act- ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மேற்படி காவல்துறையினரின் செயலை பாராட்டும் வகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சூலூர் காவல் நிலையத்திற்கு சென்று பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.
இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் யாரும் தயங்காமல் போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் குறித்த தகவல்களை வழங்கலாம் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., தெரிவித்துள்ளனர்.
0 Comments