தூத்துக்குடி – ஜீலை -10,2025
Newz – Webteam
தூத்துக்குடி மாவட்டத்தில் வீரன் அழகுமுத்துகோன் 315வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் கட்டாலங்குளம் பகுதியில் உள்ள வீரன் அழகுமுத்துகோன் மணிமண்டபத்தில் அவரது 315வது பிறந்தநாள் விழா நாளை நடைபெற உள்ளது.
மேற்படி நடைபெறும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் மணிமண்டபத்திற்கு நேரில் சென்று காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து கோவில்பட்டி K R பொறியியல் கல்லூரியில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இவ்விழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 4 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 16 காவல் துணை கண்காணிப்பாளர், 45 காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் உட்பட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1400 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயந்தி விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், காவல்துறையினருக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்.
இதில் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், . தீபு, சகாயஜோஸ் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments