விழுப்புரம் – ஜீலை – 19,2025
Newz – Webteam



விழுப்புரம் மாவட்ட காவல்துறை
சாலை பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு போதை ஒழிப்பு மற்றும் சைபர் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்ம் மற்றும் கண்காட்சி
மாவட்ட காவல் கவாத்து மைதானத்தில் இன்று சாலை பாதுகாப்பு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு போதை ஒழிப்பு மற்றும் சைபர் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்க கூட்டம் மற்றும் கண்காட்சி விழுப்புரம் சரக துணை காவல் கண்காணிப்பாளர் உமா IPS, மேற்பார்வையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் IPS.. மற்றும் மவாட்ட ஆட்சியர் ஷேக்அப்துல் ரகுமான் IAS., தலைமையில் நடைபெற்றது.
இக்கண்காட்சியில் கல்லூரி அரங்குகள், பள்ளிக்கூட அரங்குகள், ஓவிய கண்காட்சி அரங்குகள் என மொத்தம் 55 அரங்குகள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு தொடர்பான படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது.
கல்லூரி அரங்கைகளை விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் உமா இ.கா.ப., , பள்ளிக்கூட அரங்கைகளை மாவட்ட ஆட்சியர் ஷேக்அப்துல் ரகுமான் இஆப., அவர்களும் ஓவிய கண்காட்சி அரங்குகளை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பத்மஜா இ.ஆ.ப., அவர்களும் திறந்து வைத்தனர்.
கடந்த 16.07.2025 முதல் 18.07.2025 வரை மாவட்டத்தின் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற ஓவியப் போட்டடியில் 3547 மாணவ மாணவிகளும், பேச்சுப்போட்டியில் 883 மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.இக்கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்காட்சியினை பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து காணொளிகள் மூலம் குறும்படம் வாயிலாக விழிப்புணர்வுகள் காட்சிப் படுத்தப்பட்டு, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
விழிப்புணர் பேச்சு போட்டி, ஓவிய போட்டிகளில் முதல் மூன்று இடங்களை வென்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழிப்புணர்வு பேச்சாளர் டாக்டர் திரு.ஜெகன் அவர்கள் உரையாற்றி மாணவ மாணவியர்களிடையே போதை ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு. சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர் ஏற்படுத்தினார்
கண்காட்சியில் சிறப்பாக அரங்கம் அமைத்த கல்வி நிறுவனங்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பங்குபெற்ற அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு தினகரன். திரு இளமுருகன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் திரு பிரகாஷ், திரு.சரவணன், திருமதி உமாதேவி, திரு கந்தசாமி. திரு ஞானவேல் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளி/கல்லூரி கண்காட்சி போட்டியில் கீழ்கண்ட பள்ளிகள் முதல் மூன்று இடங்களை வென்றனர்.
1.செயிண்ட் ஜோசப் குளூனி மேல்நிலை பள்ளி எரையானூர், கோட்டக்குப்பம்
2.சாணக்யா மேல்நிலை பள்ளி செஞ்சி
3.அரசு மகளிர் மேல்நிலை பள்ளி கண்டாச்சிபுரம்.
- தமிழ் கலை & அறிவியல் கல்லூரி மைலம்.
2 அரசு கலை & அறிவியல் கல்லூரி திருசிற்றம்பலம்.
- அறிஞர் அண்ணா அரசு கலை & அறிவியல் கல்லூரி விழுப்புரம்.
0 Comments