கோயம்புத்தூர் – ஆகஸட் -02,2025
Newz – Webteam



கே.ஜி.சாவடி காவல் நிலைய பகுதியில் புறக்காவல் சாவடியை துவங்கி வைத்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்……
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,இ.கா.ப. இன்று ( K.G.சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டிமடை பகுதியில் புறக்காவல் சாவடியை (Police Outpost) துவங்கி வைத்தார். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெடுஞ்சாலை ஒட்டி நடக்கும் குற்றங்களை தடுப்பதற்காகவும், குறிப்பாக மற்ற மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களில் நடைபெறும் வழிப்பறி சம்பவங்களை தடுக்கும் பொருட்டும் மற்றும் சாலையில் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்காகவும் புறக்காவல் சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இந்தச் சாலையில் புதிதாக ரோந்து வாகனம் இயக்கப்பட்டு அதில் 24 மணி நேரமும் நேரடி சார்பு ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் வேலந்தாவலம், வாளையார் மற்றும் எட்டிமடை சோதனை சாவடிகளை சுழற்சி முறையில் சோதனை செய்தும் ரோந்து பணியில் இருக்க பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார், மதுக்கரை காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.மேலும் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், குற்ற செயல்கள் நடைபெறா வண்ணம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்து உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
0 Comments