கன்னியாகுமரி – ஆகஸ்ட் – 08,2025
Newz – Webteam

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா, சிலை கரைப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை கரைப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிவசேனா, இந்துமஹா சபா, இந்து முன்னணி, உள்ளிட்ட பல்வேறு இந்து இயக்க தலைவர்கள் கலந்துகொண்டனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவினை பாத்துகாப்பான முறையில் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பல்வேறு அறிவுறுத்தல்கள் மாவட்ட காவல்துறை சார்பில் வழங்கப்பட்டது.
0 Comments