வேலூர் – ஆகஸ்ட் -12,20250

வேலூர் மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள்
தமிழ்நாடு அரசின் “போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு” என்ற முன்முயற்சியின் கீழ், வேலூர் மாவட்டத்தில் போதைப் பொருள் தடுப்புக்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உணவுப் பாதுகாப்புத் துறை, வருவாய் துறை, பள்ளி கல்வி துறை அதிகாரிகள், மற்றும் பொதுமக்களின் தகவல்களின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருள் மாத்திரைகளைத் தடுப்பதற்கான தொடர் நடவடிக்கைகளின் விளைவாக, கடந்த 2024 ஆம் ஆண்டில் 674 குற்றவாளிகளுக்கு எதிராக 584 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7532 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 143 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை 172 குற்றவாளிகளுக்கு எதிராக 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1697 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 82 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டது. குற்றச் செயல்களில் ஈடுபட்ட 112 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 29 போதைப் பொருள் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, கஞ்சா, குட்கா மற்றும் வலிநிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்வதை தடுக்க தனி குழு அமைத்து கண்கணிக்கப்பட்டு வருகிறது. அண்மையில், வலிநிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தும் நோக்கில் விற்பனை செய்த 19 குற்றவாளிகள் அடங்கிய குழுவை கைது செய்து அவர்களிடமிருந்து 2000 -க்கும் மேற்பட்ட வலிநிவாரணி மாத்திரைகளான டபேண்டடால் (Tapentodol) செய்யப்பட்டது. இதேபோல், அண்டை மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதைத் தடுக்க, 6 மாநில எல்லைச் சோதனைச் சாவடிகள் பலப்படுத்தப்பட்டு, தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க, உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் இணைந்து 13,122 கடைகளில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு, 182 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 1,098 போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பிற பொதுமக்கள் கூடும் இடங்களில் நடத்தப்பட்டு, போதைப்பொருளின் தீமைகள் குறித்து, குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
0 Comments