


கன்னியாகுமரி – ஆகஸ்ட் -15,2025
Newz – Webteam
கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை வேலைவாய்ப்பு, சிட்பண்ட்,டிஜிட்டல் அர்ரெஸ்ட் போன்ற மோசடிகளில் சிக்கி இழக்க வேண்டாம்
இதற்கு முன்பாக மக்கள் காவல்துறையை தேடி சென்றீர்கள் இப்போது ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தின் மூலம் காவல்துறை உங்களை தேடி வந்திருக்கிறது
முட்டம் கிராமத்தில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 37 CCTV கேமராவின் செயல்பாட்டினை தொடங்கி வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS பேச்சு
🔹கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கிராமங்களில் ஊர் காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் இதுவரையிலும் 1450 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
▫️திருவள்ளுவர் கூற்றுப்படி தராசு தட்டு போல இரண்டு புறமும் சமமாக இருக்கும் காவல்துறையாக இருக்க விரும்புகிறேன்.எந்தவித ஜாதி மத அரசியல் வேறுபாடு பார்க்காமல் வேலை செய்கிறோம்.
▫️இதற்கு முன்பாக மக்கள் காவல்துறையை தேடி சென்றீர்கள் இப்போது காவல்துறை உங்களை தேடி வந்திருக்கிறது
▫️அப்போதுதான் ஒரு பரஸ்பரம் புரிதல் ஏற்படும்
புரிதல் ஏற்பட்டால் தான் நம்பிக்கை ஏற்படும் நம்பிக்கை ஏற்பட்டால் தான் தகவல் சொல்ல முடியும்
பொதுமக்களிடம் நம்பிக்கையே ஏற்படுத்த வேண்டும் என்று தான் இந்த ஊர் காவல் கண்காணிப்பு திட்டத்தை செயல்படுத்துகிறோம்
▫️கேமராக்களை ஏன் மூன்றாவது கண் என்று சொல்கிறோம் என்றால் குற்றங்கள் நடவாமல் தடுக்க, நடந்த குற்றத்தை யார் செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்க,
குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கி கொடுப்பதற்கு பயன்படுகிறது.
▫️எவ்வளவு அதிகமாக எண்ணிக்கையில் கேமராக்கள் பொருத்துகிறோமோ அவ்வளவு அதிகமாக நமது ஊர் பாதுகாப்பாக உள்ளது என்று உணரலாம்
▫️கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லா மக்களும் கஷ்டப்பட்டு உழைத்து பணம் சிறுக சேமித்து அதை வெளிநாடுகளில் வேலைக்கு செல்வதாக தெரியாத நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாறுகிறார்கள்.
▫️அரசாங்கத்தில் பதிவு பெற்று சிட்பண்ட்நடத்துகிறாரா என்று சோதனை செய்து அதில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும்
▫️நீங்கள் காவல்துறையினரிடம் வந்து பதிவு பெற்ற ஏஜென்சி தானா என்று தகவலை பெற்றுக் கொள்ளலாம்
▫️ஒருமுறைக்கு இருமுறை சோதனை செய்த பின் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொடுக்க வேண்டும்
▫️எல்லோரிடமும் மொபைல் போன் உள்ளது அதில் தேவையில்லாத link தொட வேண்டாம் வேண்டாம் டிஜிட்டல் arrest என்ற ஒரு நடைமுறை போய்க்கொண்டிருக்கிறது அதில் போலியாக காவல் துறை அதிகாரி போல பேசி பணத்தை வாங்குகிறார்கள்
எனவே எந்த லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம்
▫️இந்த ஊர் காவல் கண்காணிப்பு திட்டத்தில் உள்ள காவலர் வாரத்தில் மூன்று முறை ஊருக்கு வருவார் அவரிடம் உங்கள் குறைகளை கூறலாம் இல்லையென்றால் என்னுடைய whatsapp நம்பர் flexல் இருக்கும் அதில் நீங்கள் தகவல் கூறலாம்
▫️நீங்கள் காவல்துறையை கண்டு பயப்பட வேண்டிய தேவையில்லை எல்லாத்தையும் சரி பண்ணி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ரேகா இரா நங்குலட் IPS, இரணியல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செந்தில்வேல் குமார் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.
0 Comments