தூத்துக்குடி – ஆகஸ்ட் – 19,2025
Newz – Webteam




தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலை கடத்தல் சரக்கு வாகனத்துடன் 2 பைபர் படகு பறிமுதல் இருவர் கைது
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள், சரக்கு வாகனம் மற்றும் இரண்டு பைபர் படகுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி க்யூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையிலான போலீசாருக்கு பீடி இலை கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இன்று அதிகாலை 4.00 மணியளவில் தூத்துக்குடி லயன்ஸ்டவுன் அருகே உள்ள உப்பளத்து ஓடை பாலம் (மச்சாது பாலம்) பகுதியில் சிறப்பு கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக கண்டெய்னர் சரக்கு வாகனத்தில் சுமார் 35 கிலோ எடையுள்ள 43 மூட்டைகள் (மொத்தம் 1500 கிலோ) பீடி இலைகள், கட்டிங் பீடி இலை, பீடி உள்ளிட்ட பொருட்கள் ஏற்றிக் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இலங்கைக்கு கடத்தப் பயன்படுத்தப்பட்ட இரண்டு பைபர் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த அருண்குமார் (34), காயல்பட்டினமனத்தைச் சேர்ந்த இர்சாத் கான் (21) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள், சரக்கு வாகனம் மற்றும் படகுகள் அனைத்தும் விரைவில் சுங்கத்துறைக்கு ஒப்படைக்கப்பட உள்ளன என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் ஆகும்.
0 Comments