கோயம்புத்தூர் – செப் -08,2025
Newz – Webteam


பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய பகுதியில் புதிய சோதனை சாவடியை திறந்து வைத்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்….
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,இ.கா.பபொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள கோபாலபுரம் சோதனைச்சாவடியை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரிஷ்டி சிங்,இ.கா.ப., அவர்கள்,பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரலேகா அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
மேலும்,கேரள நோக்கிச் செல்லும் முக்கியச் சாலையில் அமைந்துள்ள இந்த சோதனைச்சாவடி, குற்றத் தடுப்பு மற்றும் சட்டவிரோதக் கடத்தல்களைத் தடுக்க முக்கிய பங்காற்றும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார். மேலும், இந்த சோதனைச்சாவடியை மேம்படுத்துவதில் முக்கிய பணியாற்றிய பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் பொள்ளாச்சி தாலுகா காவல் ஆய்வாளர் ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி, பாராட்டுகளை தெரிவித்தார்.
கோவை மாவட்ட காவல்துறை, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் என்பதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
0 Comments