திருப்பத்தூர் – செப் -08,2025
Newz – Webteam


திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக திருப்பத்தூர் நகர காவல் நிலையம் தேர்வு. சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் கேடயத்தை வழங்கி பாராட்டிய காவல்துறை இயக்குனர்
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பல்வேறு நடைமுறைகளில் சிறப்பாக செயல்பட்ட சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் நகர காவல் நிலையம் மாவட்டத்தின் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. மேலும் அதற்கான முதலமைச்சர் கேடயத்தை கடந்த 06.09.2025 சென்னையில் உள்ள தலைமை இயக்குனர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை இயக்குனர் வெங்கட்ராமன்,இ.கா.ப., திருப்பத்தூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமிக்கு கேடயம் பரிசாக வழங்கி பாராட்டினார்.
இதற்காக சிறப்பாக பணியாற்றிய திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சௌமியா, திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் மற்றும் ஆளினர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி.,இன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டினார்
0 Comments