


திருச்சி – செப் -16,2025
Newz – Webteam
1) இருசக்கர வாகனத்தில் போக்குவரத்து விதிமுறைகளைமீறுவோரை கண்டறிந்து தானாக வழக்கு பதிவு செய்யும் வகையில் மன்னார்புரத்தில் 4 அதிநவீன (ANPR) கேமராக்களை காவல் ஆணையர் செயல்பாட்டிற்காக தொடங்கி வைத்தும்
2) தமிழக முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி – 2025 வெற்றி பெற்ற காவல் ஆளுநர்கள் காவல் ஆணையர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மேலும் திருச்சி மாநகரத்தில் போக்குவரத்து விதிகளை மீறி இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் செல்வோர் மற்றும 3 நபர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களை கண்டறிந்து, அவர்களை துல்லியமாக தானாக படம் பிடித்து தானியங்கி வாகன எண் அடையாளம் காணும் தொழில்நுட்ப கேமரா மூலம் (Automatic Number Plate Recognition) வழக்கு பதிவுசெய்யும் விதமாக புதிய 4 அதிநவீன உயரக கேமராக்கள் மன்னார்புரம் சந்திப்பில் பொருத்தப்பட்டும், அதனை இன்று முதல் செயல்படும் வகையில் இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி., இ.கா.ப.,தொடங்கி வைத்தார்
. திருச்சி மாநகரில் ஏற்கனவே 29 அதிநவீன உயரக கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
மேலும் தமிழக முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி-
2025-ல் திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் மாநில மாவட்ட மண்டல அளவிலான சுமார் 67 வகையான போட்டிகள் நடைபெற்றது. இதில் அரசு பணியாளர்கள் பிரிவில் திருச்சி மாநகர காவல் ஆளிநர்கள் பல்வேறுபோட்டிகள் கலந்துக்கொண்டும், கபாடி போட்டியில் திருச்சி மாநகர ஆயுதப்படை அணி இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றும் பதக்கம் மற்றும் அணியில் உள்ள நபர்களுக்கு தலா ரூ.2000/- பரிசு தொகையாக பெற்றும், குண்டு எறிதல் போட்டியில் ரகு என்ற காவலர் முதல் இடம் பிடித்தும் தங்க பதக்கம் மற்றும் பரிசு தொகையாக ரூ.3000/- பெற்றார், இரண்டாம் இடத்தை .ராஜராஜன் வெள்ளி பதக்கம் மற்றும் பரிசு தொகையாக ரூ.2000/- பெற்றார்கள். மேற்படி போட்டிகளில் கலந்துக்கொண்டு பதக்கம் மற்றும் பரிசு தொகை பெற்றவர்கள் இன்று மாநகர காவல் ஆணையர் அவர்களை அலுவலகத்தில் சந்தித்தனர் அவர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, இ.கா.ப., அவர்கள் வாழ்த்தி
கௌரவித்தார்
0 Comments