திருநெல்வேலி – செப் 17,2025
Newz – Webteam

திருநெல்வேலி மாவட்ட அளவில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் வென்ற காவலர்களை பாராட்டிய காவல் ஆணையர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2025 போட்டிகளில் நெல்லை மாநகர காவல் துறை சார்பாக கலந்துகொண்ட மாநகர ஆயுதப்படை வாகனப்பிரிவு காவல் ஆய்வாளர் மகேஸ்வரி பூப்பந்து ஒற்றையர் பிரிவில் இரண்டாவது இடத்தையும், இரட்டையர் பிரிவில் முதல் இடத்தையும், தலைமை காவலர் முத்துக்குமார் பூப்பந்து ஒற்றையர் பிரிவில் முதலிடமும், பெண்தலைமை காவலர் கற்பக ராஜலட்சுமி பூப்பந்து இரட்டையர் பிரிவில் இரண்டாவது இடத்தையும், காவல் உதவி ஆய்வாளர் சுவாதிகா கைப்பந்து போட்டியில் முதலிடமும், காவலர் கிருஷ்ணவேணி 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதல் இடத்தையும், முதல் நிலை காவலர் ரேணுகா தேவி 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இரண்டாவது இடத்தையும், காவலர் உத்தண்டம் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இரண்டாவது இடத்தையும் பெற்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் வென்ற காவலர்களை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி நேரில் அழைத்து பாராட்டினார்கள். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர்கள் (மேற்கு) .பிரசண்ணகுமார் இ.கா.ப, (கிழக்கு) வினோத் சாந்தாராம், (தலைமையிடம்) .விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டார்
0 Comments