திருநெல்வேலி – அக் – 15,2025
Newz – Webteam


திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பிறவி இருதய குறைபாடு கண்டறியும் முகாம் நடைபெற்றது இம்மருத்துவ முகமானது திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையம், மற்றும் RBSK மருத்துவ குழு மற்றும் சென்னை அப்பலோ மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்றது
இந்த மருத்துவ முகாமில் 200 குழந்தைகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர் மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார் தொடங்கி வைத்தார் இந்த மருத்துவ முகாமில் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மரு ரேவதிபாலன் ,மாவட்ட சுகாதர அலுவலர் விஜய் சந்திரன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், குழந்தைகள் மருத்துவபிரிவு துறைதலைவர் DEIC மருத்துவர்கள், RBSK மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
இம்மருத்துவ முகாமில் 200 குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டு, அதில் குழந்தைகள் நவீன அறுவை சிகிச்சையில்லாத நரம்பு வழியாக சரிசெய்யப்படும் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படனர். குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்படும் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
6 ஏப்ரல் 2015 முதல் செப்டம்பர் 2025 வரை நடந்த இதய நோய் கண்டறியும்
முகாம் மூலமாக 1514 குழந்தைகளுக்கு இருதய நோய் கண்டறியப்பட்டு அதில் 528 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வருடம் ( 2025) ஏப்ரல் 2025 முதல் செப்டம்பர் 2025 வரை 3 இதய நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது . இதில் 156 குழந்தைகளுக்கு இருதய நோய் கண்டறியபட்டு அதில் 40 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளனர்.
இச்சிகிச்சையானது முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்
மூலமாக முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது .
0 Comments