

சென்னை – செப் -06,2025
Newz – Webteam
இணையவழிக் குற்றப்பிரிவு தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்துடன்
தமிழ்நாடு இணையவழிக் குற்றப்பிரிவு, உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, திறன் மேம்பாடு மற்றும் அறிவு வளர்ச்சி நோக்குடன் மூன்று நாட்கள் “திறந்த ஆதார நுண்ணறிவு (Open Source Intelligence – OSINT)” பயிற்சி முகாம்இணையவழிக் குற்றப்பிரிவு தலைமையகத்தில் நடத்தப்பட்டது.
இப்பயிற்சி முகாம் விசாரணை அதிகாரிகள், OSINT கட்டமைப்புகள் மற்றும் அவற்றின் நடைமுறைப் பயன்பாடுகுறித்து அடிப்படை அறிவு பெறவும், அவர்களின் விசாரணைத் திறன்களை மேம்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
மூன்று நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை இணையவழிக் குற்றப்பிரிவ தலைமையகத்தில், இணையவழிக் குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர், டாக்டர் சந்தீப் மித்தல், இ.காப. அவர்கள் துவக்கி வைத்தார். நிகழ்வில் பேராசிரியர். (டாக்டர்) பூர்வி போகரியால், இயக்குநர், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம், டெல்லி வளாகம் மற்றும் பேராசிரியர். (டாக்டர்) தீபக் ராஜ் ராவ்ஜி., திறன் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி முகாம் மூலம் விசாரணை அதிகாரிகளுக்கு சமீபத்திய சைபர் தடய அறிவியல் கருவிகள், முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, அவர்களின் பகுப்பாய்வு திறன்களை மேம்படுத்த வழிகாட்டப்பட்டனர். இணையவழிக் குற்றப்பிரிவு தலைமையகம் மற்றும் இணையவழிக் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் பணிபுரியும் 30 விசாரணை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
பயிற்சி முகாமில், விசாரணை அதிகாரிகளுக்கு டார்க்வெப் டீப் வெப் விசாரணைகள் (Dark Web and Deep Web Investigation), தரவுசேகரிப்பு மற்றும் விசாரணை (Data Collection and Investigation), மிரட்டல் நுண்ணறிவு மற்றும் நேரடி கண்காணிப்பு (Threat Intelligence and Real Time Monitoring), மேம்பட்ட கிரிப்டோகரன்சி மற்றும் பிளாக்செயின் விசாரணை (Advanced Crypto currency and Block chain Investigations)போன்ற சிறப்பு துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி
வழங்கப்பட்டது.
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த டாக்டர். தீபக் ராஜ்ராவ் ஜி, சேத்தன் முகுந்தன், ராகுல் காம்பிளே மற்றும் பேராசிரியர் (டாக்டர்) | மீனாக்க்ஷி சின்ஹா ஆகியோர் இந்த திறன் மேம்பாட்டு பயிற்சிவகுப்பினை நடத்தினர்.
மூன்று நாள் திறன் மேம்பாட்டு மற்றும் அறிவு வளர்ச்சி நிகழ்வானதை டாக்டர் சந்தீப் மித்தல், இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர், இணையவழிக் குற்றப்பிரிவு தலைமையில் நிறைவடைந்தது.
பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்:
- உலகில் “டிஜிட்டல் கைது” என்று எதுவும் இல்லை. அதுபற்றி யாரும் அச்சப்பட வேண்டாம்.
- குறுகிய காலத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறப்படும் எந்த அறியப்படாத வலைத்தளம் அல்லது செயலிலும் முதலீடு செய்ய வேண்டாம்.
- லிங்க் மூலம் வரும் இணைப்புகளை க்ளிக் செய்யும் முன் சரிபார்க்கவும்: எப்போதும் சந்தேகத்துடன் அணுகவும்.
- உடனடி நடவடிக்கை எடுக்குமாறு (கணக்கு சரிபார்ப்பு, கடவுச்சொல் மாற்றம்,பணம் பரிமாற்றம் போன்றவை) வரும் மின்னஞ்சல்களுக்கு எச்சரிக்கையாக கையாளுங்கள்.
- உங்கள் மின்னஞ்சல் கணக்குகளில் கடவுச் சொல்லுடன் இரட்டை
6.அடையாளச் சரிபார்ப்பு (2FA) செயல்படுத்தவும்,
வலுவான கடவுச்சொல் பயன்படுத்தவும்.
- மொபைல் பயன்பாடுகளை நம்பகமான மூலங்களில் இருந்து மட்டுமே
பதிவிறக்கம் செய்யவும்: மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை தவிர்க்கவும்.
புகார் பதிவு செய்ய :
சைபர் மோசடிக்கு ஆளானதாக சந்தேகமிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கவனித்தால் உடனடியாக இலவச உதவி எண் 1930 – யை அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் பதிவு செய்யவும்.என சைபர் க்ரைம் போலீசாரால் அறிவுறுத்தபடுகிறது
0 Comments