தூத்துக்குடி -ஜீன் -08,2024
Newz -webteam
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் – I அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் முருகபெருமாள், தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் – II அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் ஜானகி, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் – III அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் கண்ணன், கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் – II அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் ராஜமோகன், விளாத்திகுளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் . ஸ்ரீதேவி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா ஆகியோரும்,
தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா இ.கா.ப, மணியாச்சி லோகேஸ்வரன், தூத்துக்குடி ஊரகம் ராஜசுந்தர், ஸ்ரீவைகுண்டம் மாயவன், கோவில்பட்டி வெங்கடேஷ், விளாத்திகுளம் ராமகிருஷ்ணன், சாத்தான்குளம் கென்னடி, மாவட்ட குற்ற காப்பக பிரிவு பொன்னரசு, மாவட்ட குற்ற பிரிவு ராஜூ, மாவட்ட குற்ற பிரிவு II சந்திரதாசன், மற்றும் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன் உட்பட மாவட்டத்தின் அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments