திருநெல்வேலி – டிச -16,2023
Newz – webteam
நெல்லை மாநகர காவல் அதிகாரிகளுக்கான சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையாளர் மகேஸ்வரி இ.கா.ப., அவர்கள் வழிகாட்டுதலின் படி காவல் கிழக்கு துணை ஆணையாளர் ஆதர்ஷ் பசேரா இ.கா.ப தலைமையில் காவல் அதிகாரிகளுக்கான சைபர் கிரைம் விழிப்புணர்வு (Digital Payment) டிஜிட்டல் நிதி செலுத்தும் சூழல் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் Paytm செயலியின் (நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு அலுவலர்) தெற்கு பிராந்திய இயக்குனர் VVR.மூர்த்தி கலந்து கொண்டு இணைய வழியில் நடைபெறும் குற்றங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன, குற்றங்கள் நடைபெற்றால் பாதிக்கப்பட்டவரின் பணத்தை எவ்வாறு திரும்ப பெறுவது, குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது எப்படி, மேலும் காவல் துறையின் புலன் விசாரணையை இணைய வழி குற்றத்தில் எவ்வாறு மேற்கொள்ளுவது, இணைய வழி குற்றங்கள் மற்றும் UPI பயன்படுத்தும் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தும், காவல் அதிகாரிகளின் சந்தேகம் மற்றும் கேள்விகளுக்கு பதிலளித்தும் சைபர் கிரைம் குறித்தான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
0 Comments