

தூத்துக்குடி – மே -03,2025
Newz – Webteam
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் சார்பு ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு வழிகாட்டுதல் கருத்தரங்கம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
காவல் சார்பு ஆய்வாளர் பதவிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தேர்வில் வெற்றி பெற ஊக்கப்படுத்தும் நிகழ்வாக இன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏ.வி.எம் கமலவேல் மஹாலில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப தலைமையில் வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சார்பு ஆய்வாளர் தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் படித்து தேர்வில் வெற்றி பெறுமாறு வாழ்த்தி ஊக்கப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் காவல் சார்பு ஆய்வாளர்கள் தாங்கள் படித்து வெற்றி பெற்றது குறித்தும் தற்போது காவல்துறையில் மெச்சதகுந்த பணி புரிந்தது குறித்தும் மற்றும் அனுபவம் குறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. தீபு அவர்கள், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் இ.கா.ப, மாவட்ட காவல் அமைச்சுப் பணி நிர்வாக அதிகாரி மற்றும் அமைச்சு பணி அலுவலர்கள், தூத்துக்குடியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் பலர் மற்றும் காவல்துறை விண்ணப்பதாரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments