பள்ளிக்கரணை காவல் நிலைய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான கோவிலம்பாக்கத்தில் உள்ள முருகேசன் வீட்டில் சோதனை செய்த போது அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா பொருட்களை கைப்பற்றி நபரை கைதுசெய்த போலீசார்
இன்றுசுமார் 3.00 மணியளவில் பள்ளிக்கர காவல் ஆய்வாளருக்கு கோவிலம்பாக்கம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் பள்ளிக்கரணை காவல் நிலைய காவல் ஆய்வாளர் நெடுமாறன் உதவி ஆய்வாளர்கள் முத்துகுமார் மற்றும் ரகுமான்கான் மற்றும் தனிப்படை காவலர்கள் உதவியுடன் பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான
கோவிலம்பாக்கத்தில் சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் 500 கிலோ மதிப்புள்ள குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு முருகேசன் என்பவரை கைது செய்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
0 Comments