திருநெல்வேலி -ஜன -19,2025
Newz -webteam
சாலை பாதுகாப்பு மாதம்-ஜனவரி 2025 ஐ, முன்னிட்டு பயணிகள் மற்றும் சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநெல்வேலி மாநகர காவல் துறையினர்.
சாலை பாதுகாப்பு மாதம்-ஜனவரி 2025 ஐ, முன்னிட்டு சாலை போக்குவரத்து – குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் திரு.சந்தோஷ் ஹாதிமணி இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி காவல் துணை ஆணையர்கள் (மேற்கு) V.கீதா , (கிழக்கு) .வினோத் சாந்தாராம் மேற்பார்வையில், உதவி ஆணையர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு (பொறுப்பு ஆயுதப்படை) கணேசன் தலைமையில் மாநகர ஆயுதப்படையில் உதவி ஆணையர் அலுவலகத்தில் இன்று போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் (பாளை) செல்லத்துரை, (சந்திப்பு) .மணிமாறன் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர்
இணைந்து பயணிகள் மற்றும் சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது, செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டக்கூடாது, அவசர மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிட வேண்டும், மற்றும் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது. எனவும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க அறிவுரைகள் வழங்கி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்
0 Comments