திருப்பத்தூர் – நவ -16,2024
Newz -webteam
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நீதிமன்ற அலுவல்புரியும் காவல்துறையினருக்கான ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., தலைமையில் அனைத்து காவல் நிலையத்திலும் நீதிமன்ற அலுவல் புரியும் காவல்துறையினருக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வழக்குகளை கண்காணித்து, சாட்சிகளை காலதாமதமில்லாமல் ஆஜர்படுத்துதல் மற்றும் நீதிமன்ற விசாரணை விரைவாக நடைபெறுவதற்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
0 Comments