திருப்பத்தூர் – ஜீன் – 17,2023
newz – webteam
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் வாணியம்பாடி கிரமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெலதிகாமணிபெண்டா கிராமத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., தலைமையில் கிராம விழிப்புணர்வு குழு கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கிராமத்திற்கு வரும் அந்நிய நபர்கள் பற்றியும் கிராமத்தில் நடைபெறும் குற்றச் செயல்கள் குறித்தும் காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
சாராயம் விற்றல், காய்ச்சுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,
மேலும் மாதகடப்பா மலைப்பகுதியில் உள்ள மக்களின் பயன்பாட்டிற்காக மற்றும் உடனடியாக காவலர்களின் உதவியை பெற புற காவல் நிலையம் அமைய ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் .விஜய்குமார், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
0 Comments